தேமுதிக திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக தவசி சி. தம்பாவும், பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக ஆனந்த மணி ஆகியோர் தலைமை கழகத்தால் நேற்று (ஜூன் 3) நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள பொறுப்பாளர்களுக்கு நெல்லை மாவட்ட தேமுதிகவினர் பணி சிறக்க வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.