சேதமான பாலத்தை ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ

587பார்த்தது
சேதமான பாலத்தை ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ
நெல்லை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 17, 18 ஆம் தேதிகளில் பெய்த மழையினால் வெள்ளம் பெருக்கெடுத்து பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. அந்த வகையில் வெள்ளக்கோவில் பகுதியில் சிறுபாலம் சேதமடைந்தது. இந்த நிலையில், சேதமான பாலத்தை பாளையங்கோட்டை எம்எல்ஏ மு. அப்துல் வஹாப் இன்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, பாலத்தை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களிடம் உறுதியளித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி