நெல்லை மாவட்டம் காரியாண்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாவது ஆண்டாக பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதினர். இந்த தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். மாணவர்களின் தேர்ச்சிக்காக ஆக்கமும் ஊக்கமும் அளித்த தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள், பணியாளர்கள், பெற்றோர்கள் ஆகியவர்களை கல்வி ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.