உலக சுற்றுச்சூழல் தினம் இன்று (ஜூன் 5) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மானூர் யூனியன் கருங்காடு பகுதியை சேர்ந்த தூய்மை பணியாளர்களுக்கு அப்பகுதி பாஜக கிளை தலைவர் கருங்காடு கிருஷ்ண பெருமாள் பொன்னாடை அணிவித்து கௌரவித்து உலக சுற்றுச்சூழல் தின வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது பாஜகவினர் திரளாக கலந்து கொண்டனர்.