தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் நாளை (பிப்ரவரி 6) நெல்லைக்கு வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு அவரை வரவேற்பதற்காக கேடிசி நகர் பாலத்தில் கடந்த சில நாட்களாக வண்ணம் பூசும் பணி நடைபெற்றது. இந்த பணி முடிவடைந்ததை தொடர்ந்து தற்பொழுது வழிநெடுகிலும் திமுக கொடி கட்டப்பட்டு காட்சியளிக்கின்றது. இதற்கான ஏற்பாட்டை நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே. என் நேரு ஆலோசனைப்படி திமுகவினர் செய்துள்ளனர்.