நெல்லையில் புடலங்காய் மகசூல் அதிகரிப்பு

279பார்த்தது
நெல்லையில் புடலங்காய் மகசூல் அதிகரிப்பு
நெல்லை மாவட்டத்தில் கால்வாய் பாசனம் இல்லாத மானூர் சுற்றுவட்டார பகுதிகளான தென்கலம், செழியநல்லூர், தாளையூத்து, ரஸ்தா சுற்று வட்டாரங்களில் கிணற்று பாசனத்தை நம்பி காய்கனி மலர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கொடி வகைகளில் பாகற்காய் புடலங்காய் பீர்க்கங்காய் சாகுபடி செய்யப்படுகிறது. கொடி வகைகளில் பாகற்காய்க்கு அடுத்தபடியாக புடலங்காய் திகழ்கிறது. நிகழ்வாண்டில் சித்திரைப் பட்டத்தில் அறுவடை கலைகட்டி உள்ளது. வெப்பம் மிகுந்த பகுதியில் புடலங்காய் நன்கு வளரும் என்பதால் மானூர் வட்டாரத்தில் விவசாயிகள் விரும்பி பயிர் இடுகின்றனர். டிசம்பர் முதல் ஜனவரி மாதத்தில் பயிரிடப்பட்ட புடலையின் இறுதி கட்ட அறுவடை நடைபெற்று வருகிறது. மகசூல் நன்றாக உள்ளது. நிதியாண்டில் மழை குறைவு என்றாலும் நோய் தாக்கம் குறைந்தாலும் மகசூல் வீழ்ச்சி இல்லை. அடுத்ததாக ஜூன் ஜூலை மாதங்களில் மீண்டும் விதைத்தூவி பொங்கல் பண்டிகை வரை அறுவடை செய்யும் வகையில் புடலங்கை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. புடலங்காய் தாயகம் இந்தியாவாகும் கொத்துப்புடல், பேய்ப்புடல் என பல வகைகள் உள்ளன. ஒரு குழிக்கு ஐந்து வகைகள் வீதம் ஊன்ற வேண்டும். விதைநட்ட 8 முதல் 10 நாட்களில் முளைக்கத் தொடங்கிவிடும். கோ 1, கோ 2, பிகேஎம் 1, இ எம் டி யு 1, இ பி எல் ஆர் 1, இ பி எஸ் எஸ் 694, மைகோ குட்டை ஆகிய ரகங்கள் உள்ளன. உர நிர்வாகம், பூச்சிக்கொல்லி மருந்துகள் பிற காய்கனி சாகுபடி ஒப்பிடும்போது புடலங்காய்களுக்கு குறைவு. ஆகவே இதனை விவசாயிகள் அதிக அளவில் விரும்பி சாகுபடி செய்கின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி