தமிழகத்தில் புதிய கல்வி ஆண்டில் அரசு கலை அறிவியல் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு இணைய தளத்தில் விண்ணப்பிப்பது இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நெல்லை மாவட்டம் மானூர் கலைக்கல்லூரி மற்றும் ராணி அண்ணா அரசு மகளிர் கலை கல்லூரியில் வருகின்ற 22ஆம் தேதி வரை சேர்க்கை விண்ணப்பம் இணையதளத்தில் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.