உள்ளூர் விடுமுறையை அறிவித்த மாவட்ட ஆட்சியர்

1535பார்த்தது
உள்ளூர் விடுமுறையை அறிவித்த மாவட்ட ஆட்சியர்
திருநெல்வேலியில் புகழ் பெற்ற நெல்லையப்பர் கோவிலில் ஜூன் 21ஆம் தேதி தேர் திருவிழா நடைபெற உள்ளது. இந்த தேர் திருவிழாவை முன்னிட்டு அன்றைய தினம் திருநெல்வேலி மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (ஜூன் 7) அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜூன் 29ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி