தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நெல்லை டவுன் அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஆடிப்பூர வளைகாப்பு நிகழ்ச்சி இன்று (ஆக. 1) நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு சீர்வரிசை கொண்டு வந்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்தனர்.