தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெண்களுக்கு நிகழும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து இன்று (டிசம்பர் 30) அதிமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் நெல்லை மாநகர மாவட்ட அதிமுக சார்பில் வண்ணாரப்பேட்டையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுகவிற்கு எதிராக கண்டன கோஷங்களை அதிமுகவினர் சாலையில் அமர்ந்து எழுப்பினர்.