நெல்லை ஆல் தி சில்ரன் டிரஸ்ட் சார்பாக இன்று சுத்தமல்லி விலக்கில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் பங்கேற்று 3 மாற்றுத்திறனாளிகளுக்கு வீல் சேர்கள் உள்ளிட்ட 19 பேருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களை வழங்கினார்.