நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் பாளை ஒன்றியம் சார்பாக சமூக நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சீவலப்பேரி சாலையில் உள்ள தனியார் மஹாலில் இன்று (மார்ச் 14) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், அதிமுக நிர்வாகிகள் கருப்பசாமி பாண்டியன், பாப்புலர் முத்தையா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.