தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி தமிழகம் முழுவதும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அனவன்குடியிருப்பில் கரும்பு விளைச்சல் அதிகமாக காணப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. இதன் காரணமாக அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.