திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக அணைகள், குளங்கள், தாமிரபரணி ஆறுகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த வகையில் நேற்றும் மழை பெய்த நிலையில் இன்று (ஜனவரி 2) காலை நிலவரப்படி ஊத்துபகுதியில் 6 மில்லி மீட்டரும், நாலுமுக்கு பகுதியில் 4 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.