திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான அன்றாட வாழ்வியல் வேதியியல் என்ற தலைப்பில் பணிமனை நடைபெற்றது. இந்த பணிமனையில் செய்முறை கற்றலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பயிற்சிக்கு தேவையான அனைத்து பொருட்களும் அறிவியல் மையம் மூலமாக வழங்கப்பட்டன. இதில் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.