நெல்லை மாவட்டத்தில் கேரளா மருத்துவ கழிவுகள் கொட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கேரளாவுக்கே மீண்டும் கழிவுகளை கொண்டு செல்லும் நடவடிக்கை நேற்று காலை முதல் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் இன்று (டிசம்பர் 23) இரண்டாவது நாளாக கொண்டாநகரத்தில் கொட்டப்பட்ட கழிவுகளை அள்ளும் பணி தீவிரமாக நடைபெற்றது.