நெல்லை மாநகர கொக்கிரகுளம் சுலோச்சனா முதலியார் ஆற்றுபாலத்தில் நன்றாக இருக்கும் இடத்தில் டிரில் இயந்திரம் கொண்டு துளையிட்டு பாலத்தை சேதப்படுத்தி திமுக கொடி கட்டியதற்கு நெல்லை மாநகர மாவட்ட அதிமுகவினர் நேற்று (டிசம்பர் 28) மதியம் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, அதிமுக மாநில அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.