திருநெல்வேலி மாவட்டம் கோடாவிளை கடற்கரை பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம் நேற்று மாலை பார்வையிட்டு அப்பகுதி பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார். அப்பொழுது அவர் பொதுமக்களிடம் கூறுகையில் கோடாவிளை கடற்கரையை மேம்படுத்துவதற்கு சட்டமன்றத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கூறினார். இந்த ஆய்வின் போது திமுகவினர், உள்ளூர் பிரதிநிதிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.