மருத்துவ அணி மாவட்ட தலைவரின் மனிதநேய செயல்

61பார்த்தது
மருத்துவ அணி மாவட்ட தலைவரின் மனிதநேய செயல்
திருநெல்வேலி தனியார் மருத்துவமனையில் இன்று (ஜூன் 8) இருதய அறுவை சிகிச்சைக்காக பெண் ஒருவருக்கு ரத்தம் தேவைப்பட்டதை தொடர்ந்து பெண்ணின் உறவினர்கள் எஸ்டிபிஐ கட்சியினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை தொடர்ந்து நெல்லை எஸ்டிபிஐ கட்சியின் மருத்துவ சேவை அணி மாவட்ட தலைவர் ரஹ்மத்துல்லாஹ் நேரடியாக மருத்துவமனைக்கு சென்று ரத்ததானத்தை செய்தார். இதனை தொடர்ந்து தலைவர் ரஹ்மத்துல்லாஹ்க்கு பாராட்டு குவிந்து வருகின்றது.

தொடர்புடைய செய்தி