நெல்லையில் மின்சாரம் தாக்கி முதியவர் மரணம்

73பார்த்தது
நெல்லையில் மின்சாரம் தாக்கி முதியவர் மரணம்
திருநெல்வேலி சந்திப்பு கைலாசபுரம் தைக்கா தெருவில் இன்று கட்டிட சுவருக்கு தண்ணீர் அடித்த போது குலாம் மைதீன் (72) என்பவர் மீது மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை சந்திப்பு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி