திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற அரசு பள்ளியை சேர்ந்த மாணவர்களுக்கு கிரெடிட் ஆக்சஸ் கிராமின் லிமிடெட் வங்கி மூலமாக கல்வி உதவித்தொகையை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வழங்கினார். இந்த நிகழ்வின்போது மண்டல மேலாளர் சீனிவாச ஆஞ்சநேயர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.