நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கொடுமுடியாறு அணை அமைந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி 2 அடி உயர்ந்து 38. 25 அடியாக அணையின் நீர்மட்டம் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 58 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.