டாஸ்மாக்கில் ஊழல் நடந்ததாக கூறி இரு தினங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தவிருந்த பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து பல இடங்களில் அக்கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதன் ஒரு பகுதியாக, இன்று (மார்ச் 19) நாகர்கோவில் வடசேரி அருகே உள்ள டாஸ்மாக் கடையில், பாஜக மாநில மகளிர் அணி தலைவி உமா ரதிராஜன் முதல்வர் மு. க. ஸ்டாலினின் படத்தை மாட்டி, திமுக கொடியை வைத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.