மேல்மிடாலம்: அணுக்கனிம திட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
கிள்ளியூர் தாலுகா பகுதிகளில் அணுக்கனிமத் திட்டத்துக்காக ஐ ஆர் இ எல் மணலாலைக்கு வழங்கிய அனுமதியை உடனடியாக ரத்து செய்ய கேட்டும், மணலாலையை நிரந்தரமாக மூடக்கேட்டும் மேல் மிடாலம் கடற்கரை கிராமத்தில் நேற்று மாலை அணுக்கனிம சுரங்க எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் பேரணி பொதுக்கூட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. முதலில் மிடாலம் பகுதியில் இருந்து கண்டன பேரணியை ஜமாத் தலைவர் அகமது குஞ்சு தொடங்கி வைத்தார். இந்த பேரணி மேல் மிடாலம் சந்திப்பில் நிறைவடைந்தது. தொடர்ந்து நடந்த கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக் கூட்டத்திற்கு அணுக்கணிம சுரங்க எதிர்ப்பு மக்கள் இயக்கத் தலைவர் அருளானந்தம் தலைமை வகித்தார். அமைதி மற்றும் வளர்ச்சி நிர்வாகி அருட்பணியாளர் டான்ஸ்டென் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.