இரணியல்: பஸ்சின் ஜன்னல் ஓரமிருந்த தொழிலாளி கை முறிவு
குமரி மாவட்டம் வடசேரியில் இருந்து கேரளா அரசு பஸ்ஸில் திருவனந்தபுரம் செல்வதற்காக இராமன்புதூர் பகுதியை சேர்ந்த ஐயப்பன் (69) என்ற கட்டிடத் தொழிலாளி பஸ்ஸில் ஏறினார். அந்த கேரளா பஸ் தோட்டியோடு தாண்டி வில்லுக்குறி பகுதியில் முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்ற போது இரு வாகனங்களும் உரசி கொண்டது. இதில் முன்னாள் சென்ற வாகனத்தில் ஜன்னல் ஓரம் இருந்த ஐயப்பனின் இடது முழங்கையில் மோதி பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவரை அதே பஸ்ஸில் தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு முதலுதவி செய்த பின் குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சேர்க்கப்பட்டு, அங்கு ஐயப்பன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் கேரளா அரசு பஸ் டிரைவர் திருவனந்தபுரம் பகுதி சேர்ந்த ராஜேஷ் (48) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.