கொல்லங்கோடு அருகே சாத்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (65). இவர் கடந்த 14 ஆம் தேதி வீட்டில் இருந்து மாயமானார். இதுகுறித்து கொல்லங்கோடு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் நடைக்காவு ஊராட்சி அலுவலகத்தின் பின்னால் அமைந்துள்ள மணக்குளம் பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியது. அந்த பகுதி பொதுமக்கள் சுற்றிப் பார்த்தபோது குளத்தின் அருகில் ஒரு எலும்புக் கூடு கிடந்தது.
இதுகுறித்து கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அந்த எலும்புக் கூடை ஆய்வு செய்தபோது அது 20 நாட்களுக்கு முன் வீட்டில் இருந்து மாயமான தேவராஜ் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்த எலும்புக் கூடுகளை அட்டைப் பெட்டியில் எடுத்துக்கொண்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் தானாக இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக இருக்குமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.