கன்னியாகுமரி மாவட்டம் குறத்தியறை அருகே சோந்திப்பாறையைச் சேர்ந்தவர் சாந்தியமதி (25). வீட்டுப் பிரச்சனை தொடர்பாக இரண்டு பெண்கள் அத்துமீறி இவரது வீட்டுக்குள் புகுந்து வீட்டை காலி செய்யும்படி கூறி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சாந்தியமதி பூதப்பாண்டி போலீசில் புகார் அளித்ததின் பேரில் பூதப்பாண்டி போலீசார் நேற்று (ஜூலை 5) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.