நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் காவல்துறையினர் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, கோவில்குளம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற மயிலரசன் (31) என்பவரை சோதனை செய்தனர்.
அவர் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. எனவே போலீசார் மயிலரசனை இன்று (டிச.21) கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 85 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.