களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் சூழல் சரகம் சார்பாக, உலகப் புலிகள் தினம் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் திலகர் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி கல்லிடை குறிச்சியில் நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளி தலைமையாசிரியர் திரு. பண்டார சிவம் அவர்கள் தலைமையிலும், அம்பாசமுத்திரம் சூழல் சரக உதவி வன உயிரினக் காப்பாளர் திரு சக்தி பிரசாந்த் கதிர்காமன் அவர்கள் மற்றும் அம்பாசமுத்திரம் வனச்சரகர் செல்வி நித்யா அவர்கள் ஆகியவர்கள் முன்னிலையில் கூட்டம் ஆரம்பமானது. கூட்டத்தில் அம்பாசமுத்திரம் சூழல் சரகம் வனவர் திரு மோகன் தாஸ் அவர்கள், திலகர் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஆசிரியை ஆகியோர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள், அம்பாசமுத்திரம் வனச்சரக வனக்காவலர்கள் மற்றும் வனக்காப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர் போட்டிகள் மற்றும் வினாடி வினா போட்டிகள் ஆகியவை நடத்தப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியில் அம்பாசமுத்திரம் சூழல் சரக வனவர் திரு மோகன் தாஸ் அவர்கள் நன்றி உரை கூறினார்.