தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தேவேந்திரராஜா என்ற பிளஸ் டூ மாணவரை சக மாணவர்கள் சமீபத்தில் கொடூரமாக அரிவாளால் வெட்டினர். மாணவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மூத்த நிர்வாகி வன்னியரசு தற்போது மாணவனை சந்திக்க நெல்லை அரச மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். தொடர்ந்து அவர் மாணவரிடம் ஆறுதல் கூறி வருகிறார்.