வள்ளியூர் அடுத்த நடுஆறுபுளி ஊரைச் சேர்ந்தவர் மூதாட்டி அன்னம்மாள் ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இன்று அவரது வீட்டிற்குள் நுழைந்து முகமூடி அணிந்த 3 கொள்ளையர்கள் அன்னம்மாளை கத்தியை காட்டி மிரட்டி அவர் காதில் அணிந்திருந்த 3 கிராம் கம்மல் மற்றும் அவரிடமிருந்து ரூ. 1000 பணத்தையும் பறித்து சென்றனர். வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.