நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கடையம் புங்கம்பட்டியைச் சேர்ந்தவர் ராம தங்கராஜன். பல் மருத்துவரான இவர் முறையான அனுமதி இன்றி பல ஆண்டுகளாக புன்னகை என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் மது போதையில் ஒருவருக்கு பல்புடுங்கிய விவகாரம் வைரல் ஆனது. இதையடுத்து அதிகாரிகள் பல் மருத்துவமனைக்கு நேற்று சீல் வைத்தனர்.