நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருமையான அகஸ்தியர் அருவியில் கடந்த இரண்டு தினங்களாக தென் மாவட்டங்களில் அதிகரித்து வரும் வெயிலின் காரணமாகவும் வார விடுமுறை காரணமாகவும் அகஸ்தியர் அருவியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. மேலும் பாபநாசம் வனச்சோதனை சாவடியில் சுற்றுலா பயணிகளிடம் புகையிலை பொருட்கள், பிளாஸ்டிக் கேரிபேக் உள்ளனவா என தீவிர பரிசோதனைக்குப் பின்னரே வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கி வருகின்றனர்.