நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக புறநகர் மாவட்ட செயலாளருமான இசக்கி சுப்பையா இன்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். பொதுமக்கள் அளித்த புகார்களைப் பெற்றுக் கொண்ட அவர் உடனடியாக புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களுக்கு உறுதி அளித்தார்.