அம்பை வட்டாட்சியருக்கு எதிராக தீர்மானம்.

1157பார்த்தது
அம்பை வட்டாட்சியருக்கு எதிராக தீர்மானம்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டாட்சியராக இருப்பவர் சுமதி. இவர் கிராம உதவியாளர்களை தரக்குறைவாக நடத்துவதாக கூறி இன்று கிராம உதவியாளர் சங்கம் சார்பில் அவருக்கு எதிராக கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சேரன்மகாதேவியில் வைத்து நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு அம்பாசமுத்திரம் வட்ட தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். முதற்கட்டமாக சேரன்மாதவி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி