நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் சமீபத்தில் மாநகராட்சி சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது.
பல்வேறு நவீன வசதிகளுடன் பேருந்து நிலையம் திறக்கப்பட்ட நிலையில் அங்குள்ள பொது கழிவறை சரிவர பராமரிக்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கழிவறையை பராமரிக்க கோரிக்கை எழுந்துள்ளது.