நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மற்றும் பாபநாசம் வனச்சரக பகுதிக்கு உட்பட்ட வனப்பகுதி ஒட்டிய கிராமங்களில் கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளதாக வனத்துறைக்கு தகவல் சென்றது. இந்நிலையில் பாபநாசம் அருகே உள்ள செட்டி மேடு கிராமத்தில் கரடியை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். தொடர்ந்து கரடி நடமாட்டம் அதிகம் உள்ள அனைத்து பகுதிகளிலும் கூண்டு வைத்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.