நெல்லை டவுன் மாதா பூங்கொடி திரு பகுதியில் நேற்று இரவு இளைஞர்கள் மது பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி சுவற்றில் வீசி உள்ளனர். அது பயங்கர சத்தத்துடன் வெடித்தது. தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்தில் அதிரடியாக விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பூங்கொடி தெருவை சேர்ந்த சண்முகசுந்தரம்(24) என்ற வாலிபரை போலீசார் அதிரடியாக இன்று கைது செய்தனர் அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.