பாளை என்ஜிஓஏ காலனி பகுதியில் உள்ள தெருக்களில் மரங்களில் இருந்த இரும்பு மரக்கோடுகள் மற்றும் ஆணி அடிக்கப்பட்ட விளம்பர பதாகை அகற்றும் பணி இன்று நடைபெற்றது. எவர்கிரீன் கோப் நிறுவன தலைவர் சபரி வாசன் துவங்கி வைத்தார். உடன் இயற்கை ஆர்வலர்கள் ஐயங்கார் மற்றும் நிவேக் பங்கேற்றனர். ஆணி அடிப்பதால் மரங்களின் ஆயுள் காலம் குறையும் என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.