மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் நீர் நிலைகள் பராமரிப்பில் சிறந்து விளங்கும் மாவட்டங்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது.
இந்தாண்டு நெல்லை மற்றும் நாமக்கல் ஆகிய இரண்டு மாவட்டங்களை விருதுக்கு விருதுக்கு மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. எனவே இதுகுறித்து மத்திய நீர்வளத்துறை மூத்த பொறியாளர் ராஜ்குமார் தலைமையில் சிறப்பு குழுவினர் இன்று நெல்லையில் கள ஆய்வு செய்தனர்.