நெல்லை மாவட்டம் முக்கூடல் வம்பளந்தான் முக்கு பகுதியில் சதீஷ் (22) என்பவர் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கடந்த 28ஆம் தேதி சிறுவன் ஒருவர் பூட்டை உடைத்து பணப்பெட்டியில் இருந்த பணத்தை திருடி சென்றார். தொடர்ந்து அங்கிருந்து சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் போலீசார் அந்த சிறுவனை கைது செய்தனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில் டவுடர் திருடன் ஒருவன் சதீஷின் கடையில் புகுந்து மீண்டும் பணப்பெட்டியில் இருந்த பணத்தை திருடி சென்றுள்ளான். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.