தமிழகத்தின் பொன்மனச் செம்மல் என்று போற்றப்படும் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் எம்ஜிஆர் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை ஒட்டி நெல்லை மாவட்ட அதிமுக சார்பில் இன்று எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கொக்கிரக்குளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள முக்கிய போக்குவரத்து சாலையில் திரும்பும் இடமெல்லாம் எம்ஜிஆர் பேனர் வைக்கப்பட்டுள்ளது.