பக்ரீத் பண்டிகையை ஒட்டி மேலப்பாளையம் ஆட்டுச் சந்தையில் இன்று அதிகாலை முதல் ஆடுகளை வாங்குவதற்கு ஏராளமான மக்கள் வியாபாரிகள் ரோடுகளில் அலை கடலென திரண்டனர். நாகர்கோவில் பைபாஸ் ரோடு முழுவதும் வியாபாரிகள் தங்கள் வாகனங்களை நிறுத்தி வைத்து தங்கள் ஆடுகளை ரோட்டிலேயே வைத்து விற்கத் தொடங்கினர். எனவே அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.