திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு நீர் தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு இன்று (டிசம்பர் 23) சபாநாயகர் அப்பாவு, திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே. என் நேரு ஆகியோர் தண்ணீர் திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புருஸ், பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வஹாப் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.