தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவின்படி நெல்லை மாவட்டத்தில் கட்டப்பட்ட கழிவுகளை இங்கிருந்து எடுத்துச் செல்ல கேரள மாநில அதிகாரிகள் அடக்கிய சிறப்பு குழு இன்று நெல்லை மாவட்டத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் நடுக்கல்லூரில் உள்ள அரசு பள்ளியில் முகாமிட்டு தமிழக அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார்கள். அதன் பிறகு மருத்துவக் கழிவுகளை லாரிகளில் இங்கிருந்து அள்ளிச் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.