மன்னார்கோவிலில் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி திறப்பு

73பார்த்தது
மன்னார்கோவிலில் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி திறப்பு
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மன்னார்கோவில் ஊராட்சியில் வேம்படிதெரு பகுதியில் சுமார் 3.57 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி இன்று மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இதில் அம்பை ஒன்றியக் குழுத் தலைவர் பரணி சேகர் திறந்து வைத்தார். மேலும் மன்னார்கோவில் ஊராட்சி மன்றத் தலைவி ஜோதிகல்பனா பூதத்தன், ஒன்றியத் துணைத் தலைவர் பொன்னுச்சாமி வரவேற்பு நிகழ்த்தினார்.

தொடர்புடைய செய்தி