நெல்லை அருகன்குளம் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரம் இன்று சாலை ஓரம் இருந்த பழைய மரக்குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பற்றி எரிந்தது. தகவல் அறிந்த கங்கைகொண்டான் தீயணைப்புத்துறையினர் தீ அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில் சுமார் 2 மணி நேரம் போராடி தற்போது தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.