தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் இன்று (டிசம்பர் 30) தூத்துக்குடியில் இருந்து நெல்லை கேடிசி நகர் வழியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். நெல்லை வழியாக செல்லும் தமிழக முதல்வரை வரவேற்க மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன்கான் தலைமையில் முன்னாள் மாநகராட்சி மேயர் சரவணன் உள்பட முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தற்போது கேடிசி நகரில் குவிந்துள்ளனர்.