ஸ்ரீவைகுண்டம் இரயில் நிலையத்தில் கடந்தாண்டு வெள்ளத்தின் போது செந்தூர் விரைவு இரயிலை 2 நாட்கள் அங்கேயே நிறுத்தி அதில் உள்ள பயணிகள் அனைவரையும் பத்திரமாக மீட்டதற்காக இரயில் நிலைய கண்காணிப்பாளர் ஜவ்பர் அலிக்கு இந்திய இரயில்வே அமைச்சகத்தின் மிக உயரிய விருதான 'அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார் - 2024 விருது" வழங்கப்பட்டதை தொடர்ந்து, மாவட்ட கார்த்திகேயன் அவரை நேரில் அழைத்து வாழ்த்தி பாராட்டினார்.