திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அரசு மருத்துவமனையின் கூடுதல் கட்டிடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த பணிகளை இன்று (ஜூன் 6) திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அங்குள்ள ஒப்பந்ததாரர்களிடம் பல்வேறு ஆலோசனைகளை ஆட்சியர் வழங்கினார். இந்த ஆய்வின் போது அலுவலர்கள் உடன் இருந்தனர்.